புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதனால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 5 எம்.பி.,க்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில், குலாம்நபி ஆசாத், திரிணமுல் காங்கிரசின் சுதிப் பந்தோபத்யாய், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜூ ஜனதா தளத்தில் பினகிமிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி சார்பில் கோபால்யாதவ்,சிரோன்மணி அகாலிதளம் சார்பில் சுக்பீர் சிங்பாதல், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மிஸ்ரா, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜய் சாய்ரெட்டி,, மிதுன் ரெட்டி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ரஞ்சன் சிங், திமுக சார்பில் டிஆர்பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.